பயண முன்பதிவு சேவை நிறுவனமான இக்ஸிகோ, 2026-27 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.63.42 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.3.46 கோடி இழப்பைச் சந்தித்திருந்தது.
செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய், கடந்த ஆண்டைவிட 13 சதவீதம் அதிகரித்து ரூ.320.96 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த பரிவர்த்தனை மதிப்பு 22 சதவீதம் வளர்ந்து ரூ.5,304.47 கோடியை எட்டியுள்ளது.ஹோட்டல் முன்பதிவுப் பிரிவு நிறுவனத்தின் முக்கிய வளர்ச்சி காரணியாக உருவெடுத்துள்ளது. இந்தப் பிரிவின் மொத்த பரிவர்த்தனை மதிப்பு 159 சதவீதம் அதிகரித்து ரூ.111.34 கோடியாக உயர்ந்துள்ளது. வருவாய் 6 மடங்குக்கும் மேல் வளர்ந்துள்ளது.
விமானப் பயண முன்பதிவில் 37 சதவீதமும், பேருந்து முன்பதிவில் 32 சதவீதமும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஃபிரெஷ்பஸ் நிறுவனத்தில் வைத்திருந்த பங்குகளில் ஒரு பகுதியை விற்றதும் இக்ஸிகோவின் சாதனை நிகர லாபத்துக்கு உதவியுள்ளது.