Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கடனை இரட்டிப்பாக்கும் ஆக்சிஸ் வங்கி - எந்த துறைக்கு தெரியுமா?

கடனை இரட்டிப்பாக்கும் ஆக்சிஸ் வங்கி - எந்த துறைக்கு தெரியுமா?

டேட்டா சென்டர் துறைக்கு வழங்கும் கடனை அடுத்த 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க ஆக்சிஸ் வங்கி திட்டமிட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

மும்பை:

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), கிளவுட் சேவை பயன்பாடு வேகமாக அதிகரித்து வருவதால், டேட்டா சென்டர் துறைக்கு வழங்கும் கடனை அடுத்த 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க ஆக்சிஸ் வங்கி திட்டமிட்டுள்ளது.


தற்போது சுமார் 12 டேட்டா சென்டர் நிறுவனங்களுக்கு ஆக்சிஸ் வங்கி கடன் வழங்கியுள்ளது. இந்தத் துறைக்கான வங்கியின் கடன் அளவு ரூ.8,688 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இது வங்கியின் நிறுவன கடன் தொகுப்பில் 2 சதவீதத்துக்கும் சற்று அதிகமாகும்.
இந்தியாவில் டிஜிட்டல் தரவு பயன்பாடும், ஏஐ தொழில்நுட்ப முதலீடுகளும் அதிகரிப்பதால் பெரிய அளவிலான டேட்டா சென்டர்களுக்கான தேவை உயர்ந்து வருகிறது. புதிய டேட்டா சென்டர்களை அமைக்க அதிக முதலீடு தேவைப்படுவதால், நிறுவனங்கள் சொந்த முதலீட்டுடன் வங்கிக் கடனையும் நாடி வருகின்றன.


இதனால் இந்தத் துறை வங்கிகளுக்கு முக்கிய கடன் வாய்ப்பாக உருவாகி வருவதாக ஆக்சிஸ் வங்கியின் மொத்த வங்கிச் சேவை பிரிவு தலைவர் விஜய் முல்பாகல் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் செயல்படும் டேட்டா சென்டர் நிறுவனங்களுக்கும் நிதி வழங்குவது குறித்து வங்கி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதற்கிடையில், இந்திய டேட்டா சென்டர் துறைக்கு 2031-ம் ஆண்டு மார்ச் வரை சுமார் ரூ.1 லட்சம் கோடி நிதி தேவைப்படும் என்று தேசிய உள்கட்டமைப்பு நிதி மற்றும் மேம்பாட்டு வங்கி மதிப்பிட்டுள்ளது.


மின்சாரம், தண்ணீர் மற்றும் அதிக நிலப்பரப்பு தேவைப்படுவது டேட்டா சென்டர் திட்டங்களுக்கு முக்கிய சவால்களாக உள்ளன. இருப்பினும், இந்தியாவின் ஏஐ வளர்ச்சி இந்தத் துறையில் வங்கிகளுக்கான புதிய கடன் சந்தையை உருவாக்கி வருகிறது.

கடன் வழங்க வங்கிகள் ஆர்வம்


இந்திய டேட்டா சென்டர் துறைக்கு மற்ற வங்கிகளும் பெரிய அளவில் கடன் வழங்கி வருகின்றன. எஸ்பிஐ மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா இணைந்து சிடிஆர்எல்எஸ் நிறுவனத்தின் ஹைதராபாத் டேட்டா சென்டர் திட்டத்துக்கு ரூ.5,500 கோடி கடன் அனுமதித்துள்ளன. இதில் எஸ்பிஐ ரூ.4,000 கோடியும், சென்ட்ரல் பேங்க் ரூ.1,500 கோடியும் வழங்குகிறது. கனரா வங்கி சிஃபி நிறுவனத்தின் டேட்டா சென்டர் திட்டங்களுக்கு ரூ.1,995 கோடி கடன் வழங்கியுள்ளது.


இதேபோல் கோடக் மஹிந்திரா வங்கி ரூ.715 கோடி வரை, பேங்க் ஆஃப் பரோடா ரூ.596 கோடி, யெஸ் வங்கி ரூ.472 கோடி, எச்டிஎஃப்சி வங்கி ரூ.444 கோடி அளவில் பல்வேறு டேட்டா சென்டர் திட்டங்களுக்கு கடன் அனுமதித்துள்ளன. செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் சேவைகள் வளர்ச்சியால், டேட்டா சென்டர் துறை வங்கிகளின் முக்கிய உள்கட்டமைப்பு கடன் பிரிவாக உருவாகி வருகிறது.

முந்தைய செய்தி
தேசிய சுகாதார திட்டத்துக்கு ரூ.318.17 கோடி ஒதுக்கீடு
அடுத்த செய்தி
Madurai: MDL explains move to drop Tuticorin shipyard plan

தொடர்புடைய செய்திகள்