Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

டாலருக்கு நிகராக 19 காசுகள்: 4 நாட்களில் 171 காசுகள் உயர்ந்தது ரூபாய் மதிப்பு

டாலருக்கு நிகராக 19 காசுகள்: 4 நாட்களில் 171 காசுகள் உயர்ந்தது ரூபாய் மதிப்பு

கடந்த 4 வர்த்தக நாட்களில் ரூபாய் மொத்தம் 171 காசுகள் உயர்ந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 19 காசுகள் உயர்ந்து ரூ.95.17 ஆக நிறைவடைந்தது. ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் தொடர்ந்து 4-வது வர்த்தக நாளாக ரூபாய் வலுப்பெற்றுள்ளது.

அந்நியச் செலாவணி சந்தையில் ரூ.95.05-ஆக தொடங்கிய ரூபாய், வர்த்தகத்தின்போது ரூ.94.76 வரை வலுப்பெற்றது. பின்னர் ரூ.95.19 வரை சரிந்து, இறுதியில் ரூ.95.17-ஆக நிலைத்தது. முந்தைய நாள் முடிவு ரூ.95.36 ஆக இருந்தது.

கடந்த 4 வர்த்தக நாட்களில் ரூபாய் மொத்தம் 171 காசுகள் உயர்ந்துள்ளது. ஊக வணிகத்தைக் கட்டுப்படுத்தவும், உடனடி டாலர் தேவையைக் குறைக்கவும் ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள் இதற்கு உதவியதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். எண்ணெய் நிறுவனங்களுக்குத் தனி டாலர் பரிவர்த்தனை வசதி ஏற்படுத்தப்பட்டதுடன், டாலரின் எதிர்கால விலையை அடிப்படையாகக் கொண்ட வர்த்தக விதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அரசுப் பத்திர வருவாய் குறைந்ததும் ரூபாய்க்கு ஆதரவாக அமைந்தது. எனினும், உள்நாட்டுப் பங்குச் சந்தையின் பலவீனம் உயர்வைக் கட்டுப்படுத்தியது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, வெளிநாட்டு முதலீடு வெளியேற்றம் மற்றும் மத்திய கிழக்குப் பதற்றம் ஆகியவை ரூபாயின் மேலும் வலுவான முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கலாம் என சந்தை ஆய்வாளர் அனுஜ் சவுத்ரி தெரிவித்தார். ரூபாயில் அதிக ஏற்றத்தாழ்வுகளைத் தடுக்க ரிசர்வ் வங்கி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். வெளிப்புறச் சவால்களே ஏற்றத்தாழ்வுகளுக்கு முக்கியக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி
சந்தையை விரிவுப்படுத்தும் இந்திய நிறுவனங்கள்!
அடுத்த செய்தி
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் - ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை

தொடர்புடைய செய்திகள்