அமெரிக்காவைச் சேர்ந்த பொறியியல் நிறுவனத்திடம் இருந்து ரூ.46 கோடி மதிப்பிலான ஆர்டரை டீ டெவலப்மென்ட் இன்ஜினீயர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
தொழில்துறை சாதனங்களுக்கான தொகுதிகள் மற்றும் குழாய் அமைப்புகளைத் தயாரிப்பதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 2027 ஜூலை மாதத்துக்குள் முடிக்கப்படும்.
2026–27 நிதியாண்டில் ரூ.1,500 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் கே.எல்.பன்சால் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் தாய்லாந்தில் உள்ள உற்பத்தி ஆலைகள் மூலம் சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்தவும், உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.