தகவல் தொழில்நுட்ப நிறுவனமான பெர்சிஸ்டென்ட் சிஸ்டம்ஸின் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிகர லாபம் 25.44 சதவீதம் சரிந்து ரூ.351.51 கோடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் லாபம் ரூ.471.47 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 30.25 சதவீதம் உயர்ந்து ரூ.4,663.9 கோடியாக அதிகரித்துள்ளது.ஜெர்மனியைச் சேர்ந்த நகாரோ நிறுவனத்தைக் கையகப்படுத்துவதற்காக ரூ.185.34 கோடி செலவிடப்பட்டுள்ளது.
ஜூலை–செப்டம்பர் காலாண்டில் நிறுவனம் 633.5 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி வருவதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சந்தீப் கல்ரா தெரிவித்துள்ளார்.