பங்குத் தரகு நிறுவனமான குரோவின் தாய் நிறுவனமான பில்லியன் பிரெயின்ஸ் கேரேஜ் வென்ச்சர்ஸ், செப்டம்பருடன் முடிந்த இரண்டாவது காலாண்டில் ரூ.725 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டைவிட 54 சதவீதம் அதிகமாகும்.
செயல்பாட்டு வருவாய் 47 சதவீதம் உயர்ந்து ரூ.1,501 கோடியை எட்டியது. எனினும், முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் பங்கு வழி வர்த்தக வருவாய் 14.3 சதவீதம் சரிந்தது. மொத்த வருவாயில் இப்பிரிவின் பங்கு 57 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாகக் குறைந்தது.
கடனுதவியுடன் பங்கு வர்த்தகம், சரக்கு வர்த்தகம் உள்ளிட்ட பிரிவுகளின் வளர்ச்சி லாப உயர்வுக்கு உதவியது. முந்தைய காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.735 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.