திருவாரூரில் ரூ.1,427.61 கோடியில் 14.9 கி.மீ. நீளத்துக்கு நான்கு வழிப் புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம்–தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை எண் 83-ல் இந்தப் புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலை எண்கள் 129ஏ, 134ஏ ஆகியவற்றில் இரண்டு மேம்பாலங்களும் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டம் மூலம் திருவாரூர் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயண நேரத்தைச் சுமார் 15 நிமிடங்கள் வரை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட தொழில் மையங்களுக்கும், நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகப் பகுதிகளுக்கும் இடையிலான சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்தவும் இத்திட்டம் உதவும்.