Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இரண்டாவது மூலதனச் சந்தை மாநாட்டை மும்பையில் நடத்தியபி பிபிஎஃப்

இரண்டாவது மூலதனச் சந்தை மாநாட்டை மும்பையில் நடத்தியபி பிபிஎஃப்

மும்பையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், ஒழுங்குமுறை அமைப்புகள், பங்குச் சந்தைகள், பத்திர வைப்பகங்கள், பரிவர்த்தனைத் தீர்வு நிறுவனங்கள், நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் நிதித்துறை பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

பகிரவும் WhatsApp Facebook

முதலீட்டாளர் பாதுகாப்பு, நிதிக் கல்வி, சந்தை நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு குறித்து விவாதிக்கும் இரண்டாவது மூலதனச் சந்தை மாநாட்டை பம்பாய் பங்குச் சந்தை தரகர்கள் மன்றம் (பிபிஎஃப்) மும்பையில் நடத்தியது.

மும்பையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், ஒழுங்குமுறை அமைப்புகள், பங்குச் சந்தைகள், பத்திர வைப்பகங்கள், பரிவர்த்தனைத் தீர்வு நிறுவனங்கள், நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் நிதித்துறை பிரதிநிதிகள் பங்கேற்றனர். உலக முதலீட்டாளர் வாரத்தை ஒட்டி நடத்தப்பட்ட மாநாட்டில், இந்திய மூலதனச் சந்தையின் எதிர்காலம், முதலீட்டாளர் பங்கேற்பை விரிவுபடுத்துதல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பான முதலீடு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

சிறப்புரையாற்றிய செபி தலைவர் துஹின் காந்த பாண்டே, நிதி நிலைத்தன்மையையும் முதலீட்டாளர் நம்பிக்கையையும் வலுப்படுத்துவதில் ஒழுங்குமுறை அமைப்பின் பங்கை எடுத்துரைத்தார். சந்தை நேர்மை, பொறுப்பான புதுமைகள் மற்றும் சவால்களைத் தாங்கக்கூடிய சந்தைக் கட்டமைப்பின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
எம்எஸ்இஐ, எம்சிஎக்ஸ், என்சிடிஇஎக்ஸ், சிடிஎஸ்எல், என்எஸ்டிஎல் உள்ளிட்ட சந்தைக் கட்டமைப்பு நிறுவனங்களின் தலைவர்கள், தொழில்நுட்ப மேம்பாடு, பாதுகாப்பான பரிவர்த்தனைகள் மற்றும் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்துவது குறித்து பேசினர். இணையவழி மோசடிகளிலிருந்து முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதும் விவாதத்தின் முக்கிய அம்சமாக இடம்பெற்றது.

தரகர்களுக்கான தொழில்துறை தரநிலைகள் மன்றம் குறித்த சிறப்பு அமர்வில், விதிமுறை இணக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் தரங்களை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஒழுங்குமுறை அமைப்புகள், சந்தை நிறுவனங்கள், இடைத்தரகர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடையேயான ஒத்துழைப்பு, இந்திய நிதித்துறையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு முக்கியம் என பிபிஎஃப் தலைவர் அனுப் குப்தா தெரிவித்தார்.


முந்தைய செய்தி
நாட் ஹேபிட் விரிவாக்கத்துக்கு ரூ.142 கோடி முதலீடு
அடுத்த செய்தி
பொதுத்துறை வங்கிகளின் லாபம் அதிகரிக்க வாய்ப்பு

தொடர்புடைய செய்திகள்