Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பெடரல் வங்கியின் நிகர லாபம் 45% உயர்வு - கிரெடிட் கார்டு எண்ணிக்கை அதிகரிப்பு?

பெடரல் வங்கியின் நிகர லாபம் 45% உயர்வு - கிரெடிட் கார்டு எண்ணிக்கை அதிகரிப்பு?

நிகர வட்டி வரம்பு 3.32 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தனியார் துறை வங்கியான பெடரல் வங்கியின் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு நிகர லாபம் 45 சதவீதம் உயர்ந்து ரூ.1,386 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிகர லாபம் ரூ.955 கோடியாக இருந்தது.

வங்கியின் நிகர வட்டி வருவாய் 26 சதவீதம் உயர்ந்து ரூ.3,153 கோடியாக அதிகரித்துள்ளது. கடன் வழங்கல் 22 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. நிகர வட்டி வரம்பு 3.32 சதவீதமாக உயர்ந்துள்ளது.


வெளிநாடுவாழ் இந்தியர்களிடமிருந்து ஆர்பிஐயின் சிறப்புத் திட்டத்தின் கீழ் திரட்டப்பட்ட 150 கோடி டாலர் டெபாசிட், வங்கியின் லாப உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.


வங்கியின் தங்கக் கடன் வழங்கல் 37 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்த வாராக்கடன் விகிதம் முந்தைய காலாண்டில் இருந்த 1.52 சதவீதத்திலிருந்து 1.32 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதற்கிடையே, ஜனா சிறு நிதி வங்கியுடன் இணைவது தொடர்பாக தற்போது அறிவிக்க எதுவுமில்லை என்று பெடரல் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி கே.வி.எஸ். மணியன் தெரிவித்தார்.


ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியின் கிரெடிட் கார்டு வர்த்தகத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை டிசம்பருக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் வங்கியின் கிரெடிட் கார்டு எண்ணிக்கை சுமார் 20 சதவீதம் அதிகரிக்கும். இதனிடையே, பிஎஸ்இ சந்தையில் பெடரல் வங்கியின் பங்கு 0.6 சதவீதம் உயர்ந்து ரூ.337-ல் நிறைவடைந்தது.

முந்தைய செய்தி
குழந்தைகளை விஜய் பிரசாரத்தில் ஈடுபடுத்தியது ரசனையற்றது: உயர் நீதிமன்றம் சரமாரி கருத்து
அடுத்த செய்தி
தமிழக செமிகண்டக்டர் திட்டத்தில் 2 திருச்சி நிறுவனங்களுக்கு இடம்

தொடர்புடைய செய்திகள்