டி-மார்ட் சில்லறை விற்பனைச் சங்கிலியை நடத்தும் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு ஒருங்கிணைந்த நிகர லாபம் 8.5 சதவீதம் உயர்ந்து, ரூ.742.98 கோடியை எட்டியுள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிகர லாபம் ரூ.684.85 கோடியாக இருந்தது. செயல்பாட்டு வருவாய் ரூ.16,676.30 கோடியிலிருந்து 17.8 சதவீதம் அதிகரித்து, ரூ.19,644 கோடியாக உயர்ந்துள்ளது.
நிறுவனத்தின் மொத்தச் செலவுகள் 18.3 சதவீதம் அதிகரித்து ரூ.18,632.70 கோடியாகின. பிற வருமானத்தையும் உள்ளடக்கிய மொத்த வருமானம் 17.73 சதவீதம் உயர்ந்து ரூ.19,657.54 கோடியை எட்டியது.
நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் மொத்த வருமானம் 16.47 சதவீதம் உயர்ந்து ரூ.38,477.85 கோடியாக உள்ளது. ராதாகிஷன் தமானி குடும்பத்தால் தொடங்கப்பட்ட டி-மார்ட், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயல்படுகிறது.