Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மேட்டூரிலிருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு 50% குறைப்பு

மேட்டூரிலிருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு 50% குறைப்பு

அணையிலிருந்து நேற்று காலை விநாடிக்கு 6,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், மாலையில் இது 3,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது.

பகிரவும் WhatsApp Facebook

காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழை மற்றும் பாசனத்துக்கான தண்ணீர் தேவை குறைந்துள்ளதால், மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து நேற்று காலை விநாடிக்கு 6,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், மாலையில் இது 3,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது.

காலை 8 மணிக்கு அணையின் நீர்மட்டம் 54.91 அடியாகவும், நீர் இருப்பு 21,044 மில்லியன் கனஅடியாகவும் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 4,834 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

மாலை 4 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 54.82 அடியாகவும், நீர் இருப்பு 20,982 மில்லியன் கனஅடியாகவும் குறைந்தது. நீர்வரத்து விநாடிக்கு 2,826 கனஅடியாகச் சரிந்தது. அணையிலிருந்து கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பதிவாகவில்லை.

முந்தைய செய்தி
Kim Jong-un’s sister warns of ‘new counter means’
அடுத்த செய்தி
எச்சரிக்கையுடன் இருங்கள் - இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

தொடர்புடைய செய்திகள்