Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வெள்ளி விலை உயர்வு: நெருக்கடியில் பாரம்பரிய வெள்ளிக் கொலுசு தொழில்

வெள்ளி விலை உயர்வு: நெருக்கடியில் பாரம்பரிய வெள்ளிக் கொலுசு தொழில்

விலையேற்றம் காரணமாகச் சேலம் உற்பத்தியாளர்கள் 75% ஆர்டர்களை இழந்ததாக சேலம் சில்வர் ஆங்கிளெட் கன்சோர்டியம் அமைப்பின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பகிரவும் WhatsApp Facebook

சேலத்தின் அடையாளமான வெள்ளிக் கொலுசு உற்பத்தி தற்போது கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. வெள்ளி விலையேற்றம், இயந்திரமயமாக்கல் உள்ளிட்டவை இத்தொழிலின் பின்னடைவுக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.

மாவட்டத்தில் சுமார் 10,000 கொலுசு உற்பத்தி மையங்கள் மூலம் 2 லட்சத்துத்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். தினமும் 2,000 கிலோ வெள்ளிப் பொருட்கள் உற்பத்தியாகின்றன. நாட்டின் மொத்த வெள்ளிக் கொலுசு உற்பத்தியில் 60 சதவீதம் சேலம் பங்களிப்பாகும். இங்கு தயாராகும் கொலுசுகள் மற்றும் இதர வெள்ளி ஆபரணங்கள் பிற மாநிலங்களுக்கு மட்டுமின்றி, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கொலுசுகள் மட்டுமின்றி, மெட்டி மற்றும் வெள்ளி விளக்குகளும் தயாரிக்கப்படுகின்றன. தலைமுறை தலைமுறையாக சேலத்தில் தயாரிக்கப்படும் வெள்ளிக் கொலுசுகளுக்கு எப்போதும் இந்தியா முழுவதும் தனி மவுசு உண்டு.

2000-ம் ஆண்டு முதல் இத்தொழிலில் சில சிக்கல்கள் ஏற்பட்டன. உள்ளூர் தொழிலாளர்களின் கூலி உயர்ந்ததால், வடமாநிலத் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.

சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கே.எஸ்.உதயகுமார் கூறியதாவது: சேலத்துக்கு வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் இங்குள்ள பிரத்யேக தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொண்டு, தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர். அங்குள்ள உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் அவர்கள் பணியில் சேர்ந்தனர். பின்னர் வடமாநிலத்திலேயே வெள்ளிக் கொலுசுகள் தயாரிக்கப்பட்டதால், சேலம் உற்பத்தியாளர்களுக்கான ஆர்டர்கள் பெருமளவில் குறைந்தன.

மேலும், வடமாநில உற்பத்தியாளர்கள் இயந்திரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்ததுடன், குறைந்த எடையிலான வடிவமைப்புகளையும் அறிமுகப்படுத்தினர். கைவினைத் தொழிலாளர்கள் தயாரிக்கபடும் சேலம் கொலுசுகள் வழக்கமாக 40 முதல் 50 கிராம் எடை கொண்டவை. ஆனால், இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் கொலுசுகள் 30 கிராமுக்கு குறைந்த எடையில் உருவாக்கப்படுவதால், அவற்றின் விலையும் குறைவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி விலை உயர்வு

வெள்ளி விலையில் ஏற்பட்ட திடீர் உயர்வும் கொலுசுத் தொழிலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த ஜனவரி மாதம் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.4,25,000 வரை உயர்ந்ததால், சாதாரண மக்கள் வெள்ளி ஆபரணங்கள் வாங்குவதை தவிர்த்தனர். விலையேற்றம் காரணமாகச் சேலம் உற்பத்தியாளர்கள் 75 சதவீத ஆர்டர்களை இழந்ததாக சேலம் சில்வர் ஆங்கிளெட் கன்சோர்டியம் அமைப்பின் இயக்குநர் டி. ஆனந்த் தெரிவித்துள்ளார்.

"பொதுவான குடும்ப விழா பட்ஜெட்டுகள், பண்டிகைக் காலங்களில் கொலுசு மற்றும் வெள்ளிப் பொருட்களின் முக்கியத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. ஊக வணிகம் ஒருபுறமிருக்க, மின்சார வாகனங்கள் தயாரிப்புத் தொழிற்துறைகளில் த் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், வெள்ளி விலை பெருமளவு குறையவில்லை. ஹால்மார்க் முத்திரை மற்றும் தரப்படுத்தப்பட்ட எடைப் பிரிவுகளைக் கொண்டுவருவது நுகர்வோருக்குத் தரமான உத்தரவாதத்தையும், பல்வேறு விலைத் தேர்வுகளையும் வழங்கும்" என்றார் உதயகுமார்.

சேலம் மாவட்ட கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைச் சங்கத் தலைவர் சி.ஆனந்தராஜ் கூறும்போது, "ஜிஎஸ்டி முறையை ஏற்றுக்கொள்வதில் நிலவும் தாமதமே தர நிர்ணயம் மற்றும் தொழில்நுட்ப முதலீட்டுக்கு தடையாக உள்ளது. பள்ளிகளில் மாணவிகள் கொலுசு அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் கொலுசுக்கு புவிசார் குறியீடு பெறுவது போன்ற முயற்சிகள், அதன் பிரத்யேக மதிப்ப உயர்த்த உதவும்" என்றார்.

முந்தைய செய்தி
Russia accused of threatening actions in space
அடுத்த செய்தி
Russia pounds Kyiv with missiles, drones, after agreeing to peace talks

தொடர்புடைய செய்திகள்