Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஈரோடு ஜவுளி சந்தையில் தீபாவளி விற்பனை மும்முரம்

ஈரோடு ஜவுளி சந்தையில் தீபாவளி விற்பனை மும்முரம்

ஆந்திர பிரதேசம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் தீபாவளி விற்பனைக்காக ஜவுளிகளை மொத்தமாகக் கொள்முதல் செய்தனர்.

பகிரவும் WhatsApp Facebook

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, ஈரோடு ஜவுளிச் சந்தையில் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் அதிக அளவில் வந்து ஜவுளி ரகங்களைக் கொள்முதல் செய்து வருகின்றனர். தற்போது மொத்த விற்பனை 40 சதவீதமும், சில்லறை விற்பனை 50 சதவீதமும் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மொத்த வணிகம் சுமார் ரூ.10 கோடியை எட்டியுள்ளதாகவும், தீபாவளி நெருங்க நெருங்க விற்பனை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

ஈரோட்டில் வாரந்தோறும் திங்கள்கிழமை பிற்பகல் தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் ஜவுளிச் சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் கடைகள் அமைத்து ஜவுளி ரகங்களை விற்பனை செய்து வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ஆந்திர பிரதேசம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் தீபாவளி விற்பனைக்காக ஜவுளிகளை மொத்தமாகக் கொள்முதல் செய்தனர். செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் வந்து துணிகளை வாங்கிச் சென்றனர்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்பப் பல்வேறு புதிய ரக ஜவுளிகளை விற்பனைக்காகக் கடைகளில் இருப்பு வைத்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வரும் நாள்களில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் கூறினர்.

முந்தைய செய்தி
HCLTech launches NVIDIA-powered AI solution to reduce physical testing of vehicle software
அடுத்த செய்தி
Govt plans major agri voltaics programme

தொடர்புடைய செய்திகள்