சென்னை தேனாம்பேட்டை மெட்ரோ அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. கட்டடத்தின் கீழே இருந்த குப்பைகளில் தீப்பற்றி அதன் அருகே இருந்த கட்டடத்திலும் தீ பரவியது.
(Video credit: Naren Kumar K)
தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். மேலும் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.