கர்நாடகாவின் ஹூப்ளி மற்றும் சென்னை இடையே அக்டோபர் 27-ஆம் தேதி முதல் நேரடி விமானச் சேவை மீண்டும் தொடங்கப்படவுள்ளது. இத்தகவலை இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படவுள்ளது. இதற்கான கால அட்டவணையின்படி, ஹூப்ளியிலிருந்து மாலை 4:25 மணிக்கு புறப்படும் இண்டிகோ விமானம் மாலை 6:05 மணிக்கு சென்னை வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னையிலிருந்து மாலை 6:35 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 8:20 மணிக்கு ஹூப்ளியை சென்றடையும்.
சுமார் 1 மணி நேரம் 40 நிமிடங்களில் இரு நகரங்களுக்கும் இடையேயான பயணத்தை இந்த விமானம் சாத்தியமாக்குகிறது. இந்தச் சேவைக்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கப்பட்டு, பயணிகள் தங்கள் பயணங்களைத் திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.