Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வைரலான போனஸ் உயர்வு அறிவிப்பு - ரயில்வே வாரியம் சொன்னதென்ன?

வைரலான போனஸ் உயர்வு அறிவிப்பு - ரயில்வே வாரியம் சொன்னதென்ன?

போனஸ் உயர்த்தி வழங்குவது தொடர்பாக அக்.6-ம் தேதி ஒரு கடிதம் சமூக ஊடகத்தில் வைரலானது.

பகிரவும் WhatsApp Facebook

நாடு முழுவதும் ரயில்வேயில் பணியாற்றும் தகுதியுள்ள அலுவல்சாரா ஊழியர்களுக்கு உற்பத்தியுடன் கூடிய போனஸ் உயர்த்தி வழங்குவது தொடர்பாக அக்.6-ம் தேதி ஒரு கடிதம் சமூக ஊடகத்தில் வைரலானது. அதனால் ரயில்வே ஊழியர்கள் உற்சாகமடைந்தனர். இந்நிலையில், அந்த கடிதம் போலியானது என்று ரயில்வே வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது. கூடவே அதிகாரிகளும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:


ரயில்வே ஊழியர்களுக்கு 2025-26 நிதியாண்டுக்கான உற்பத்தியுடன் கூடிய போனஸ் (PLB) வழங்குவது தொடர்பாக இணையத்தில் தவறான தகவல் பரவி வருகிறது. ரயில்வே வாரியம் வெளியிட்டதாக கூறப்படும் ‘ஆர்பிஇ எண். 101/2026 மற்றும் 06-10-2026 தேதி’ கொண்ட அந்த கடிதம் போலியானது. அந்த கடிதத்தை, ரயில்வே வாரியம் வெளியிடவில்லை என்பதை இந்த கடிதத்தின் மூலம் தெளிவுப்படுத்துகிறோம்.

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்துக்கு இணையான உற்பத்தியுடன் கூடிய போனஸ் ரூ.41,149 வழங்கப்படும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதும் போலியானது.
எனவே, மண்டல ரயில்வேகள், உற்பத்திப் பிரிவுகள், இதர ரயில்வே அலுவலகங்கள் ஆகியவை இந்த போலிக் கடிதத்தின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் ​​கூடாது.

போனஸ் வழங்குவது தொடர்பாக, எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு, கிடைக்கப்பெறும் தகவலின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.
கூடுதலாக ரயில்வே அமைச்சகத்தின் அல்லது ரயில்வே வாரியத்தின் https://indianrailways.gov.in/railwayboard/ அல்லது https://indianrailways.gov.in/ என்ற இணைய தளங்கள் மூலமாக சரிபார்க்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
Bangladesh hopeful of resolving river water-sharing issues with India through diplomacy
அடுத்த செய்தி
போரால் இந்தியாவுக்கு பாதிப்பு - பாமாயிலுக்கு மாறத் தொடங்கும் இறக்குமதியாளர்கள்!

தொடர்புடைய செய்திகள்