Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவு - இதுதான் காரணம்?

அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவு - இதுதான் காரணம்?

இந்தியாவின் கையிருப்பு 10 மில்லியன் டாலர் குறைந்து, 4.78 பில்லியன் டாலராக உள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு , கடந்த அக். 9-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 8.578 பில்லியன் டாலர் குறைந்து, 726.027 பில்லியன் டாலராக உள்ளது. இதன் மூலம் தொடர்ந்து ஐந்தாவது வாரமாக அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவைக் கண்டுள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரங்களில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த செப். 4-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், வரலாறு காணாத அளவுக்கு 785.706 பில்லியன் டாலரை எட்டியது. வெளிநாடு வாழ் இந்தியர்களின் வைப்புத்தொகைகளுக்கான சிறப்பு சலுகை அடிப்படையிலான அந்நியச் செலாவணி பரிமாற்றத் திட்டத்தின் மூலம் வங்கிகள் திரட்டிய பெருமளவிலான நிதி இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது.


இந்த திட்டத்தின் கீழ் வங்கிகள் ஏறத்தாழ 133 பில்லியன் டாலர் திரட்டி இருந்தது. அதன் பின்னர் உச்சத்தில் இருந்து தற்போதைய நிலையில், கையிருப்பு 59.68 பில்லியன் டாலர் சரிந்துள்ளது.
மொத்தக் கையிருப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் அந்நியச் செலாவணி சொத்துகள், அக்டோபர் 9-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 7.142 பில்லியன் டாலர் குறைந்து, 597.605 பில்லியன் டாலராக உள்ளன.

 இதேபோல, ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பும் 1.319 பில்லியன் டாலர் குறைந்து, 105.094 பில்லியன் டாலராக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தில், இந்தியாவின் சிறப்பு எடுப்புரிமை (எஸ்.டி.ஆர்.) 109 மில்லியன் டாலர் சரிந்து, 18.548 பில்லியன் டாலராக உள்ளது.
மேலும், சர்வதேச நாணய நிதியத்திடம் உள்ள இந்தியாவின் கையிருப்பு 10 மில்லியன் டாலர் குறைந்து, 4.78 பில்லியன் டாலராக உள்ளது. 

அந்நியச் செலாவணி சொத்துகளின் டாலர் மதிப்பில், யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட பிற நாட்டு நாணயங்களின் மதிப்பு உயர்வு அல்லது சரிவின் தாக்கமும் இடம்பெறும்.
இதற்கு முந்தைய வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 12.952 பில்லியன் டாலர் குறைந்து, 734.606 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சரிவுக்கு முக்கிய காரணங்கள்

ரூபாயின் மதிப்பு மேலும் சரிவதைத் தடுக்க, ஆர்பிஐ தனது அந்நியச் செலாவணி கையிருப்பிலிருந்து டாலர்களை விற்பனை செய்வது.
கச்சா எண்ணெய்க்கு இறக்குமதியை சார்ந்துள்ள இந்தியா, அதன் விலை உயர்வால் அதிக டாலர்களைச் செலவிடும் சூழல்.


வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளை விற்று, தங்கள் முதலீட்டுப் பணத்தைத் திரும்ப பெறுவது.
கையிருப்பில் உள்ள தங்கம், வெளிநாட்டு நாணயங்கள் உள்ளிட்ட பிற சொத்துக்களின் மதிப்பு குறைவது.

முந்தைய செய்தி
பெல்லில் ரூ.2.4 லட்சம் கோடி ஆர்டர் கையிருப்பு
அடுத்த செய்தி
குழந்தைகளை விஜய் பிரசாரத்தில் ஈடுபடுத்தியது ரசனையற்றது: உயர் நீதிமன்றம் சரமாரி கருத்து

தொடர்புடைய செய்திகள்