Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தங்கம், வெள்ளி இறக்குமதி வங்கிகளுக்கான ஐஜிஎஸ்டி விலக்கு ரத்து

தங்கம், வெள்ளி இறக்குமதி வங்கிகளுக்கான ஐஜிஎஸ்டி விலக்கு ரத்து

கடந்த 2017-ல் வங்கிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட ஏஜென்சிகள், தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்களை இறக்குமதி செய்யும்போது ஐஜிஎஸ்டி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

பகிரவும் WhatsApp Facebook

வெளிநாடுகளில் இருந்து தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றை இறக்குமதி செய்யும் வங்கிகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி விலக்கை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

கடந்த 2017-ல் வங்கிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட ஏஜென்சிகள், தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்களை இறக்குமதி செய்யும்போது ஐஜிஎஸ்டி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதற்கிடையே, குஜராத்தின் கிஃப்ட் சிட்டியில், இந்திய சர்வதேச வர்த்தக பரிவர்த்தனை மையம் (IIBX) உருவாக்கப்பட்டு, விலை உயர்ந்த உலோகங்களுக்கான இறக்குமதி மற்றும் மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.


சர்வதேச வர்த்தக பரிவர்த்தனை மையங்கள் வாயிலாக தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், சுங்க வரியுடன் 3 சதவீத ஐஜிஎஸ்டியையும் செலுத்தி வருகின்றன. ஆனால், வங்கிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த வரி விலக்கு காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே வரி நடைமுறையில் வேறுபாடு நிலவியது. இதைச் சீரமைக்கும் வகையில் தற்போது வங்கிகளுக்கான வரி விலக்கு நீக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, வங்கிகள் இந்த உலோகங்களை இறக்குமதி செய்யும்போது 3 சதவீத ஐஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இந்த நடைமுறை கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக வருவாய்த் துறைச் செயலர் அரவிந்த் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

கூடுதல் வரிச்சுமை?

வங்கிகள் இறக்குமதியின்போது செலுத்தும் ஐஜிஎஸ்டியை, உள்ளீட்டு வரிப் பயன் (ITC) மூலம் ஈடுசெய்துகொள்ள முடியும். உள்நாட்டில் நகை உற்பத்தியாளர்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு உலோகங்களை விற்பனை செய்யும்போது, பொருந்தக்கூடிய ஜிஎஸ்டி விதிகளுக்கு உட்பட்டு இந்த வரியைச் சரிசெய்யலாம்.எனவே, இந்த மாற்றம் வங்கிகளின் இறக்குமதியின்போது, வரி செலுத்தும் நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தினாலும், வங்கிகளுக்கு அது முழுமையான கூடுதல் வரிச் சுமையாக மாறாது.


ஜிஎஸ்டியில் பல்வேறு சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தங்கம், வெள்ளி இறக்குமதியில் வரி விதிப்பு சமநிலையை ஏற்படுத்தும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. மேலும், தங்கம் உள்ளிட்ட உலோகங்களின் இறக்குமதியால் அந்நியச் செலாவணி மீது ஏற்படும் தாக்கத்தையும் மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி
UK Trade Minister to lead north England delegation to India
அடுத்த செய்தி
AI spending surge for US agencies as subsidised deals give way to market pricing

தொடர்புடைய செய்திகள்