Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தசரா பண்டிகையில் கரப்பான் பூச்சி பொம்மையை எரிக்க முடிவு

தசரா பண்டிகையில் கரப்பான் பூச்சி பொம்மையை எரிக்க முடிவு

தலைநகர் டெல்லியின் அரசியல் சூழல் மிகவும் பரபரப்பாக உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ராம்லீலா மைதானத்தில் ராவணன் உருவபொம்மையுடன் 30 அடி உயர கரப்பான்பூச்சி உருவபொம்மையையும் எரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி(சிஜேபி) டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதனால், ஆளும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்புக் குறியீடாக கரப்பான்பூச்சி மாறியுள்ளது. தசரா பண்டிகையின்போது டெல்லியில் ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இந்த உருவபொம்மைகளுடன் 30 அடி உயரமுள்ள கரப்பான் பூச்சி உருவ பொம்மையையும் எரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவை, வடமேற்கு டெல்லியின் பிதாம்புரா பகுதியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வை நடத்தும் 'ஸ்ரீ கேசவ் ராம் லீலா கமிட்டி' எடுத்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபியினர் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தலைநகர் டெல்லியின் அரசியல் சூழல் மிகவும் பரபரப்பாக உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கு அந்தக் கமிட்டியின் தலைவரும், பாஜக எம்எல்ஏவுமான அசோக் கோயல் கூறும்போது, ’உருவ பொம்மை எரிப்பு நிகழ்வில் கரப்பான்பூச்சியை சேர்த்ததற்கு எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சிஜேபியின் போராட்டத்தால் டெல்லியில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. டெல்லியின் முக்கிய அமைப்பான ‘சேம்பர் ஆப் டிரேட் அண்ட் இண்டஸ்டிரீஸ்’ அமைப்பு சார்பில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதில், டெல்லி போராட்டத்தால் வியாபாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2,000 கோடி இழப்பு ஏற்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய செய்தி
Coonoor station blooms in vibrant red
அடுத்த செய்தி
மேகமலை புலிகள் காப்பகம் விவகாரம்: தமிழக அரசு அடுத்த நடவடிக்கை

தொடர்புடைய செய்திகள்