Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பார்சல் சேவை: அஞ்சல் துறை - ப்ளூ டார்ட் ஒப்பந்தம்

பார்சல் சேவை: அஞ்சல் துறை - ப்ளூ டார்ட் ஒப்பந்தம்

இந்திய அஞ்சல் துறையுடன், தனியார் அஞ்சல் நிறுவனமான ப்ளூ டார்ட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

நாடு முழுவதும் பார்சல் சேவையை விரிவுப்படுத்தும் வகையில் இந்திய அஞ்சல் துறையுடன், தனியார் அஞ்சல் நிறுவனமான ப்ளூ டார்ட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

நாடு முழுவதும் தபால் துறைக்கு 1.64 லட்சம் அஞ்சல் நிலையங்கள் உள்ளன. இதனை ப்ளூ டார்ட் பயன்படுத்திக் கொண்டு, நகர்ப்புற, ஓரளவு நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்கள், தொலைதூர மற்றும் போதிய சேவை கிடைக்காத பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பார்சல் விநியோக சேவையை வழங்கும். முன்பணம் செலுத்திய மற்றும் கேஷ் ஆன் டெலிவரி விநியோகம், ஓடிபி அடிப்படையிலான விநியோக அங்கீகாரம் மற்றும் நிகழ்நேர சரக்குக் கண்காணிப்பு ஆகியவையும் மேற்கொள்ளப்படும்.
உலகின் மிகப்பெரிய அஞ்சல் வலையமைப்பை கொண்டுள்ள தபால் துறை, இந்தியாவில் மின்னணு வர்த்தக வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தி, தகவல் தொடர்பு, தளவாடங்கள் மற்றும் நிதிச் சேவைகளை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ப்ளூ டார்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் விநியோகம் மற்றும் தளவாடத் தீர்வுகளை வழங்கும் ஒரு விரைவு தளவாட மற்றும் விநியோக நிறுவனமாகும். இந்நிறுவனம், மின்னணு வர்த்தகம் மற்றும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டிய விரைவு தளவாடங்கள் உட்பட, பல்வேறு துறைகளில் உள்ள வணிகங்களுக்குச் சேவை செய்வதில் விரிவான உள்நாட்டு வலையமைப்பையும் அனுபவத்தையும் கொண்டுள்ளது.
இந்த கூட்டு முயற்சியானது, இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் மின்னணு வர்த்தகத் துறைக்கு ஆதரவளிக்கும் தளவாட உட்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய செய்தி
இனி இங்கெல்லாம் விமான சேவை ‘கட்’ - முக்கிய மாற்றங்களை கொண்டு வந்த சேலம் ஏர்போர்ட்
அடுத்த செய்தி
US green-card freeze a warning for Indian IT industry against wider curbs: GTRI

தொடர்புடைய செய்திகள்