Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

FSIB மறுசீரமைப்பு: புதிய தலைவராக SCL.தாஸ் நியமனம்

FSIB மறுசீரமைப்பு: புதிய தலைவராக SCL.தாஸ் நியமனம்

இயக்குநர்களைத் தேர்வு செய்வதில் இவருக்கு உதவ 6 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பகிரவும் WhatsApp Facebook

பொதுத்துறை வங்கிகள், காப்பீடு மற்றும் நிதி நிறுவனங்களுக்கான உயர்மட்ட அதிகாரிகளைத் தேர்வு செய்யும் 'நிதிச் சேவை நிறுவனங்கள் பணியகத்தை' மத்திய அரசு மறுசீரமைத்துள்ளது. இதன் புதிய தலைவராக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையின் முன்னாள் செயலர் எஸ்சிஎல்.தாஸ் 3 ஆண்டு காலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இயக்குநர்களைத் தேர்வு செய்வதில் இவருக்கு உதவ 6 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அரிஜித் பாசு, எஸ்.கே.மராத்தே, ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தேர்வையும், சித்தார்த்தா மொஹந்தி, நீரஜா கபூர், டி.எல்.அலமேலு ஆகியோர் காப்பீட்டு நிறுவனங்களின் தேர்வையும் கவனிப்பார்கள்.

எஃப்எஸ்ஐபி வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு இறுதி முடிவெடுக்கும். 2022-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, வங்கி மற்றும் நிதித்துறை அதிகாரிகளின் நியமனங்கள், பணி நீட்டிப்பு மற்றும் நன்னடத்தை விதிகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி
பிரான்ஸ் போராட்டத்தில் தீவைப்பு: 143 ஆண்டு நகராட்சி கட்டிடம் சேதம்
அடுத்த செய்தி
தவறான கூற்றுகளை பாக்கெட்டில் வெளியிட்ட நெஸ்லே, யூனிலீவர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

தொடர்புடைய செய்திகள்