Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பொதுத்துறை வங்கிகளின் லாபம் ரூ.1.98 லட்சம் கோடியாக உயர்வு

பொதுத்துறை வங்கிகளின் லாபம் ரூ.1.98 லட்சம் கோடியாக உயர்வு

2026 மார்ச் 31 நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகளின் மொத்த வணிகம் ரூ.283 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

கடந்த 2025–26-ம் நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் வரலாறு காணாத வகையில் ரூ.1.98 லட்சம் கோடி நிகர லாபமாக ஈட்டியுள்ளன. மொத்த வாராக்கடன் விகிதம், இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

வங்கித் துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து இருந்தார். வங்கிகளின் சேவைக் கட்டணங்கள், குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்காததற்கான அபராதம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கடன் தள்ளுபடி, வாடிக்கையாளர்களுக்கான கடன் வசதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அரசின் செயல்பாடுகள் குறித்து அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், வங்கித் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மத்திய நிதியமைச்சகம் விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

2026 மார்ச் 31 நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகளின் மொத்த வணிகம் ரூ.283 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வங்கிகளின் வாராக்கடன் அளவு குறைந்திருப்பது, கடன் வழங்குவதில் ஒழுங்குமுறை மேம்பட்டிருப்பது ஆகியவை வங்கிகளின் நிதிநிலை மேம்பட்டு இருப்பதை பிரதிபலிக்கிறது. 

நாட்டில் அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ், 2014 ஆகஸ்ட் முதல் இதுவரை 59 கோடிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இக்கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை. கணக்கில் பணம் இல்லாததற்காக அபராதமும் விதிக்கப்படுவதில்லை.

மேலும், பிரதமரின் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 59 கோடிக்கும் மேற்பட்ட கடன் கணக்குகளுக்கு ரூ.43 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன் வழங்கப்பட்டுள்ளது. 

விவசாயிகள், சிறு தொழில்முனைவோர், தெருவோர வியாபாரிகள், கைவினைஞர்கள் உள்ளிட்டோருக்குக் கடன் வசதி கிடைக்க கிசான் கிரெடிட் கார்டு, பிஎம் ஸ்வநிதி, பிஎம் விஸ்வகர்மா, ஸ்டாண்ட் அப் இந்தியா உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் வழக்கமான சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காததற்கான கட்டணங்களை ரத்து செய்துள்ளன அல்லது குறைத்துள்ளன. 

இதே போன்று, வங்கிகளின் கடன் வசூல் முகவர்கள் வாடிக்கையாளர்களை மிரட்டவோ, அச்சுறுத்தவோ, துன்புறுத்தவோ கூடாது என்று ரிசர்வ் வங்கி தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது .

மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கறுப்புப் பணம், கள்ளநோட்டுப் புழக்கம் மற்றும் சட்டவிரோத எல்லை தாண்டிய நிதிப் பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கை ஆகும். இதன் மூலம் அதிகமான பரிவர்த்தனைகள் முறைப்படுத்தப்பட்ட நிதி அமைப்புக்குள் கொண்டுவரப்பட்டதுடன், யுபிஐ போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைகளின் பயன்பாடும் ஊக்குவிக்கப்பட்டது.

நாட்டின் நிதி உள்ளடக்கக் குறியீடு (Financial Inclusion Index), கடந்த 2017-ல் 43.4 ஆக இருந்த நிலையில், 2026-ல் 70 ஆக உயர்ந்துள்ளது. வங்கிச் சேவைகள் மற்றும் நிதி வசதிகள் மக்களைச் சென்றடைந்துள்ளதை இது காட்டுகிறது.டிஜிட்டல் நிதி மோசடிகளைத் தடுப்பதற்காகப் பரிவர்த்தனை எச்சரிக்கைகள், இரண்டு கட்ட அங்கீகாரம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
45 பில்லியன் டாலரை எட்டும் இந்திய விண்வெளிப் பொருளாதாரம்
அடுத்த செய்தி
கொசு விரட்டிகள் பயன்பாடு குறித்த கள ஆராய்ச்சித் திட்டம்: அமைச்சர் அருண்ராஜ் தகவல்

தொடர்புடைய செய்திகள்