Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய மஹிந்திராவின் சரக்கு வாகனம் அறிமுகம்

ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய மஹிந்திராவின் சரக்கு வாகனம் அறிமுகம்
பகிரவும் WhatsApp Facebook

எரிபொருள் சிக்கனத்தை 10 சதவீதம் வரை மேம்படுத்தும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்துடன் கூடிய பிளாசோ ஐ-டிரக் (BLAZO i-TRK) எனும் பெயரில் கனரக சரக்கு வாகனத்தை மஹிந்திரா டிரக் அண்ட் பஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மஹிந்திரா குழுமத்தின் நிர்வாகக் குழு உறுப்பினரும், டிரக் அண்ட் பஸ் பிரிவின் தலைவருமான வினோத் சஹாய் புதிய வாகனத்தை அறிமுகப்படுத்தினார். இந்த வாகனத்தில் 7.2 லிட்டர் எம்-பவர் (mPOWER) டீசல் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இது 320 குதிரைத்திறனையும், 1,100 முதல் 1,700 ஆர்பிஎம் (RPM) வரையிலான வேகத்தில் 1,100 நியூட்டன் மீட்டர் முறுக்குவிசையையும் வழங்குகிறது.


ஐ-ஃப்யூல்ஸ்மார்ட் ஆட்டோ டிரைவ் (iFuelSmart Auto Drive), டர்போமேக்ஸ், ஆப்டிஃப்யூல் (OptiFuel) ஆகிய தொழில்நுட்பங்கள் எரிபொருள் பயன்பாட்டை மேம்படுத்துகின்றன. ஐமேக்ஸ் 2.0 வசதி, வாகன செயல்பாடுகளைக் கண்காணிக்க உதவுகிறது. மேலும், 48 மணி நேரத்துக்குள் உதவி வழங்கும் இயக்க நேர உத்தரவாதம் மற்றும் நவ் மொபைல் செயலி ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து வினோத் சஹாய் கூறியதாவது: மேம்பட்ட தொழில்நுட்பங்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே மஹிந்திராவின் நோக்கம். எஸ்யூவி (SUV) வாகனங்களில் பயன்படுத்தும் நவீனத் தொழில்நுட்பங்களைப் போலவே, நடுத்தர மற்றும் கனரக சரக்கு வாகனங்களிலும் அறிமுகப்படுத்துகிறோம். பிளாசோ ஐ-டிரக், இந்தியாவின் இன்டெலிஜெண்ட் டிரக் என்று குறிப்பிடுவது வெறும் விளம்பர வாசகம் அல்ல.

 இதில் உள்ள டூயல்-கோர் பிராசசர் (Dual-core processor), பயணத்தின்போதே தகவல்களை ஆய்வு செய்து, சூழலுக்கு ஏற்ப இயந்திரத்தின் சக்தி பயன்பாட்டைத் தீர்மானிக்கிறது. ஜிபிஎஸ் மூலம், மொபைல் நெட்வொர்க் இல்லாத பகுதிகளிலும் வாகனத்தின் இருப்பிடத்தை அறிய முடியும். இந்தியாவில் வேறு எந்த டிரக்கிலும் இந்தத் தொழில்நுட்பம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
Reliance Infra Q2 profit rises 1.2%
அடுத்த செய்தி
ஓராண்டில் 25% சரிவடைந்த கொப்பரை தேங்காய் விலை

தொடர்புடைய செய்திகள்