Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

RBL வங்கியுடன் Emirates NBD கிளைகள் இணைப்பு

RBL வங்கியுடன் Emirates NBD கிளைகள் இணைப்பு

கடந்த மே மாதம் ஆர்பிஎல் வங்கியில் 74 சதவீதம் வரை பங்குகளை வாங்குவதற்கு எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

பகிரவும் WhatsApp Facebook

துபாயைச் சேர்ந்த எமிரேட்ஸ் என்பிடி வங்கியின் இந்தியக் கிளைகளை, ஆர்பிஎல் வங்கியுடன் இணைப்பதற்கு ஆர்பிஐ ஒப்புதல் அளித்துள்ளது. இது வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயை தலைமையிடமாக கொண்ட எமிரேட்ஸ் என்பிடி வங்கி, கடந்த 2017-ல் இந்தியாவில் தனது முதல் கிளையை மும்பையில் தொடங்கியது. பின்னர், குருகிராம் மற்றும் சென்னையிலும் கிளைகளைத் திறந்தது. மேலும், 2000-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் பிரதிநிதி அலுவலகத்தையும் இந்த வங்கி நடத்தி வருகிறது.

இதனிடையே, கடந்த மே மாதம் ஆர்பிஎல் வங்கியில் 74 சதவீதம் வரை பங்குகளை வாங்குவதற்கு எமிரேட்ஸ் என்பிடி வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதன் தொடர்ச்சியாக ஆர்பிஎல் வங்கியின் விரிவாக்கப்பட்ட பங்கு மூலதனத்தில் 60 சதவீதப் பங்குகளை எமிரேட்ஸ் என்பிடி வங்கி கடந்த ஜூன் 18-ல் கையகப்படுத்தியது. இதற்காக, சுமார் 2.75 பில்லியன் டாலர், அதாவது ரூ.26,000 கோடி அளவுக்கு முதலீடு செய்திருந்தது.

தேவையான ஒழுங்குமுறை ஒப்புதல்களைப் பெற்றதைத் தொடர்ந்து, இந்த முதலீடு நிறைவு செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, ஆர்பிஎல் வங்கியின் 92.91 கோடி புதிய பங்குகளை தலா ரூ.280 விலையில் எமிரேட்ஸ் என்பிடி வங்கி வாங்கியது. இதன் மொத்த மதிப்பு ரூ.26,016 கோடியாகும்.

தற்போதைய ஆர்பிஐ அளித்துள்ள ஒப்புதலின் மூலம், இந்தியாவில் செயல்பட்டு வரும் எமிரேட்ஸ் என்பிடி வங்கியின் அனைத்துக் கிளைகளும் டிசம்பர் 1 முதல் ஆர்பிஎல் வங்கியின் கிளைகளாகச் செயல்படும். எனினும், வாடிக்கையாளர் சேவைகள் அல்லது இதர செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுமா என்பது குறித்து அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

இதனிடையே, தேசியப் பங்குச் சந்தையில் ஆர்பிஎல் வங்கிப் பங்கு விலை நேற்று 1.10 சதவீதம் உயர்ந்து ரூ.378.25-ஆக இருந்தது.

முந்தைய செய்தி
Demat கணக்குகளில் குவியும் தங்க முதலீடு
அடுத்த செய்தி
Madurai: Rescue services conduct flood drill ahead of rainy season

தொடர்புடைய செய்திகள்