Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

18% உயர்ந்த Flipkart வருவாய்

18% உயர்ந்த Flipkart வருவாய்

ஃபிளிப்கார்ட் விளம்பரப் பிரிவின் வருவாய் 31 சதவீதமும், மொத்த லாப வரம்பு 23 சதவீதமும் உயர்ந்துள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

ஃபிளிப்கார்ட் குழுமத்தின் செயல்பாட்டு வருவாய் கடந்த நிதியாண்டில் 18 சதவீதம் உயர்ந்து ரூ.1.46 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், சரிசெய்யப்பட்ட செயல்பாட்டு இழப்பு சுமார் ரூ.1,600 கோடி குறைந்துள்ளது.

நிறுவனப் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகளின்படி, குழுமத்தின் நிகர இழப்பு, முந்தைய நிதியாண்டில் திருத்தப்பட்ட ரூ.8,646 கோடியிலிருந்து ரூ.8,468 கோடியாகக் குறைந்தது. இது சுமார் ரூ.178 கோடி குறைவாகும். ஃபிளிப்கார்ட் விளம்பரப் பிரிவின் வருவாய் 31 சதவீதமும், மொத்த லாப வரம்பு 23 சதவீதமும் உயர்ந்துள்ளன.

2007-ல் தொடங்கப்பட்ட ஃபிளிப்கார்ட் 50 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களையும், 14 லட்சத்துக்கும் அதிகமான விற்பனையாளர்களையும் கொண்டுள்ளது.

நிறுவனத்தின் தலைமையகத்தை இந்தியாவுக்கு மாற்றியதைத் தொடர்ந்து, ஃபிளிப்கார்ட் இன்டர்நெட் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் குழுமத்தின் ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகள் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளன.

இவை கடந்த நிதியாண்டுக்கான நிதிநிலை விவரங்களே தவிர, தற்போதைய வர்த்தக நிலவரத்தைப் பிரதிபலிப்பவை அல்ல என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
Air India sets up panel to identify cost-saving opportunities
அடுத்த செய்தி
Expert backs India's Starlink licensing stance

தொடர்புடைய செய்திகள்