Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

Credit Strong சேவை ஓராண்டில் 17 மடங்கு வளர்ச்சி: ரதி ஷெட்டி

Credit Strong சேவை ஓராண்டில் 17 மடங்கு வளர்ச்சி: ரதி ஷெட்டி

ஆய்வின்படி, வீடு வாங்கும் இலக்குக்கான மதிப்பீட்டில் பெண்கள் 91.4 மதிப்பெண்ணும் ஆண்கள் 87 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர்.

பகிரவும் WhatsApp Facebook

ஏறத்தாழ 75 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட பேங்க்பஜார் (BankBazaar) நிறுவனம், தனது வளர்ச்சியைத் தீவிரப்படுத்தி லாபத்துக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில், கிரெடிட் ஸ்ட்ராங் (Credit Strong) உள்ளிட்ட நிதிச் சேவைகளை விரிவுபடுத்தி வருகிறது. இந்த சேவை ஓராண்டில் 17 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளதாக, குமுதம் பிஸ் நியூஸ் டெய்லிக்கு அளித்த பேட்டியில், நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைத் தயாரிப்பு அதிகாரி ரதி ஷெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரதி ஷெட்டி கூறியதாவது: தனிநபர் கடன், தங்கக் கடன் மற்றும் கிரெடிட் ஸ்ட்ராங் சேவைகளை விரிவுபடுத்துவது நிறுவனத்தின் முக்கிய வளர்ச்சித் திட்டங்களாக உள்ளன. வங்கிகளுடன் இணைந்து வழங்கப்படும் இணை முத்திரைக் கடன் அட்டைகளும் (Co-branded Credit Cards) முக்கிய வருவாய் வழிகளில் ஒன்றாக உள்ளன.

கிரெடிட் ஸ்ட்ராங் சேவை, வாடிக்கையாளர்கள் தங்களது கடன் மதிப்பெண்ணை புரிந்துகொண்டு மேம்படுத்த உதவுகிறது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த தனிப் பயனாக்கப்பட்ட விளக்கங்கள், கட்டண நினைவூட்டல்கள் மற்றும் கடன் மதிப்பெண் கணிப்புக் கருவிகள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும் இதற்கு முதல் மாதம் ரூ.1 கட்டணமும், பின்னர் மாதந்தோறும் ரூ.99 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

சென்னை மட்டுமின்றி கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் நிதிச் சேவைகளுக்கான தேவை இருக்கிறது. பேங்க்பஜார், இணையவழி நிதிச் சேவைத் தளமாக செயல்பட்டு, கடன் அட்டைகள், தனிநபர் கடன்கள் மற்றும் கடன் மதிப்பெண் தொடர்பான சேவைகளை வழங்குகிறது. கடன் மதிப்பெண்ணுடன் சேமிப்பு மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனையும் மதிப்பிடுவது அவசியம்.

நிறுவனத்தின் ஆய்வின்படி, வீடு வாங்கும் இலக்குக்கான மதிப்பீட்டில் பெண்கள் 91.4 மதிப்பெண்ணும் ஆண்கள் 87 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர். மனிமூட் ஆய்வில் 61 சதவீதத்தினர் அவசரச் செலவுகளுக்காகச் சேமிப்பதாகத் தெரியவந்துள்ளது. வாடிக்கையாளர்களின் நிதி விழிப்புணர்வு மற்றும் நீண்டகால நிதிப் பாதுகாப்பை மேம்படுத்துவது முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பட விளக்கம்
ரதி ஷெட்டி

முந்தைய செய்தி
Govt plans colour-coded driving licences for citizens, foreign nationals
அடுத்த செய்தி
India must shift from rice production to value addition: Chirag Paswan

தொடர்புடைய செய்திகள்