அமெரிக்கா, ஜெர்மனி, நார்வே உள்ளிட்ட நாடுகளிலிருந்து 40க்கும் மேற்பட்ட கப்பல்களைக் கட்டுவதற்கான ஆர்டர்களை கொச்சி கப்பல் கட்டும் தளம் பெற்றுள்ளதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘இந்தியக் கப்பல் கட்டுமான நிறுவனங்களின் தரம், உற்பத்தித்திறன் ஆகியவற்றின் மீதான உலகளாவிய நம்பிக்கை அதிகரித்துள்ளது. கப்பல் கட்டுமானத்துக்கு உகந்த சூழலை அமைச்சகம் உருவாக்கி வருகிறது. இந்தியக் கப்பல் கட்டும் தளங்களுடன் இணைந்து செயல்பட சில ரஷ்ய நிறுவனங்களும் ஆர்வம் காட்டுகிறது. பெல்ஜியமும் இந்தியாவுடன் ஒத்துழைக்க விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியக் கப்பல் கட்டுமானத்துக்கான வாய்ப்புகள் விரிவடைகிறது,’’ என்றார்.கொச்சிக்கு 40-க்கும் மேற்பட்ட கப்பல் ஆர்டர்கள் - மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘இந்தியக் கப்பல் கட்டுமான நிறுவனங்களின் தரம், உற்பத்தித்திறன் ஆகியவற்றின் மீதான உலகளாவிய நம்பிக்கை அதிகரித்துள்ளது.