Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கார்ல்ஸ்பெர்க் இந்தியா ஐபிஓவுக்கு செபி ஒப்புதல்

கார்ல்ஸ்பெர்க் இந்தியா ஐபிஓவுக்கு செபி ஒப்புதல்
கார்ல்ஸ்பெர்க் இந்தியா

டென்மார்க்கைச் சேர்ந்த கார்ல்ஸ்பெர்க் குழுமத்தின் இந்திய நிறுவனமான கார்ல்ஸ்பெர்க் இந்தியா, பங்குச்சந்தை பட்டியலிடலுக்கான முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

புதுடெல்லி:

டென்மார்க்கைச் சேர்ந்த கார்ல்ஸ்பெர்க் குழுமத்தின் இந்திய நிறுவனமான கார்ல்ஸ்பெர்க் இந்தியா, பங்குச்சந்தை பட்டியலிடலுக்கான முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. நிறுவனத்தின் ரகசிய முன்தாக்கல் ஆவணங்களுக்கு பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி ஒப்புதல் வழங்கியுள்ளது.

கார்ல்ஸ்பெர்க் இந்தியா கடந்த ஜூலையில் ரகசிய முறையில் ஐபிஓ ஆவணங்களை செபியிடம் தாக்கல் செய்தது. இந்த முறையில் நிறுவனம் முழு விவரங்களையும் பொதுவெளியில் உடனடியாக வெளியிடாமல் முதற்கட்ட அனுமதியை பெற முடியும். இந்த ஐபிஓவின் மதிப்பு சுமார் 70 கோடி டாலர், அதாவது ரூ.6,600 கோடி முதல் ரூ.6,700 கோடி வரை இருக்கலாம். ஆனால், இறுதி வெளியீட்டு அளவு, விலைப்பட்டை மற்றும் கால அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த வெளியீடு முழுமையாக ‘ஆஃபர் ஃபார் சேல்’ முறையில் இருக்கலாம். புதிய பங்குகள் மூலம் நிறுவனத்துக்கு நிதி திரட்டாமல், தாய் நிறுவனமான கார்ல்ஸ்பெர்க் தனது பங்குகளில் ஒரு பகுதியை விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ல்ஸ்பெர்க் இந்தியா 2007-ல் இந்தியாவில் செயல்பாடுகளை தொடங்கியது. கார்ல்ஸ்பெர்க், டுபோர்க் உள்ளிட்ட பிராண்டுகளை விற்பனை செய்கிறது. இந்திய பீர் சந்தையில் இதன் பங்கு சுமார் 22 சதவீதம். நாடு முழுவதும் 14 உற்பத்தி நிலையங்களை இயக்கி வருகிறது. செபியின் ஒப்புதல் கிடைத்துள்ளதால், சந்தை நிலவரத்தைப் பொறுத்து ஐபிஓவை அடுத்த கட்டத்துக்கு நிறுவனம் கொண்டு செல்ல முடியும். இந்த ஐபிஓ இந்த ஆண்டின் இறுதிக்குள் சந்தைக்கு வரலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

முந்தைய செய்தி
ஷிப்ட் முறையை கொண்டு வாங்க! - போர்க்கொடி தூக்கும் அரசு மருத்துவர்கள்
அடுத்த செய்தி
கூடுதல் மின்சாரம் வாங்க விரைவில் டெண்டர்: அமைச்சர் சொன்ன தகவல்

தொடர்புடைய செய்திகள்