இந்திய கடற்படை தொடர்பான ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு பகிர்ந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த வழக்கில் அங்கு பணியாற்றும் பொங்கு ரவி, கடாரி ஸ்ரீனிவாஸ் ஆகியோரை ஆந்திர காவல் துறையின் கவுன்ட்டர் இன்டலிஜென்ஸ் பிரிவினர் கைது செய்தனர்.
'ஏஞ்சல் பயல்' என்ற பெயரிலான போலி சமூக வலைதள கணக்கைப் பயன்படுத்திய பெண்ணுடன் முகநூல் மூலம் இவர்களுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் பணத்துக்காக நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க்கப் பல்கள் குறித்த ரகசிய தகவல்களை பகிர்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அண்மையில் இதே வழக்கில் கடற்படை அதிகாரி பிரதீப் முகர்ஜி, ஆந்திர போலீஸாரால் கோயம்புத்தூரில் கைது செய்யப்பட்டார்.
இதுவரை இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதனர். வழக்கில் தொடர்புடைய 18 சந்தேக நபர்களில், 13 பேர் கடற்படைப் பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.