Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

2 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

2 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

மும்பையைச் சேர்ந்த எஸ்எஸ்பிஎல் சொல்யூஷன்ஸ் மற்றும் சமுத்ரா மரைன் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஈரானில் இருந்து பெட்ரோலியப் பொருட்களை வர்த்தகம் செய்ய உதவியதாக, மும்பையைச் சேர்ந்த 2 இந்திய நிறுவனங்கள் மற்றும் 5 இந்தியர்கள் மீது அமெரிக்க அரசு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

ஈரானின் நிதி ஆதாரங்களை முடக்கும் நோக்கில் 'ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்' என்ற திட்டத்தை அமெரிக்க வெளியுறவு மற்றும் நிதித்துறை முன்னெடுத்துள்ளது. அதன்படி, ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்ய உதவியதாக, மும்பையைச் சேர்ந்த எஸ்எஸ்பிஎல் சொல்யூஷன்ஸ் மற்றும் சமுத்ரா மரைன் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது.


மேலும், இந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய த்வனி வோரா, நிசர்க் வோரா, கேதன் கோச்சிகர், பூபேந்திரசிங் சாஹு, ஹரிஷ்யாம் ஹரிஹரன் ஆகியோரது வங்கிக் கணக்குகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளும் முடக்கப்பட்டுள்ளன. 

இவர்கள் மூலம் ஈரானிய அரசுக்கு பல மில்லியன் டாலர்கள் நிதி சென்று சேர்ந்துள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.


இதனிடையே, சமுத்ரா மரைன் சர்வீசஸ் நிறுவனம் தனது வர்த்தகப் பணிகளை முடித்துக் கொள்ள வரும் 23-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, ஈரானின் ரகசியக் கப்பல் வலையமைப்பைச் சேர்ந்த மேலும் 17 நிறுவனங்கள் மீதும் தடைகளை அமல்படுத்தியுள்ளது.

முந்தைய செய்தி
அண்டார்டிகா கடலில் பனிக்கு நடுவே பெரிய நீர்ப்பரப்பு
அடுத்த செய்தி
Trump honours Microsoft CEO amid Vance’s H-1B visa crackdown

தொடர்புடைய செய்திகள்