Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவி பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவி பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யும் உரிமை, குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

சர்வதேச அளவில் அமைதியை மேம்படுத்தவும், சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை நிலைநாட்டவும் ஆற்றிய பணிகளுக்கு, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவரும், தமிழ் வம்சாவளியுமான நவநீதம் பிள்ளைக்கு 2026-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில், நிறவெறி ஆட்சி நிலவிய காலத்தில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர் நவநீதம் என்ற நவி பிள்ளை. அக்காலத்தில் நிலவிய இனப் பாகுபாடு, சமூகப் பிரிவினை மற்றும் உரிமை மறுப்பு ஆகியவற்றை எதிர்கொண்டு, சட்டத் துறையில் முன்னோடியாக உருவெடுத்தார்.


தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய அவர், பின்னர் ரூவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்திலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் நீதிபதியாகப் பொறுப்பு வகித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் தொடர்பான ஐ.நா.வின் சுயாதீன சர்வதேச விசாரணைக் குழுவுக்கும் நவி பிள்ளை தலைமை வகித்துள்ளார்.

 தற்போது, மியான்மர் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு தொடர்பாக நடைபெறும் சர்வதேச நீதிமன்ற வழக்கில் நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.
இந்த ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்கு மொத்தம் 287 தனிநபர் மற்றும் அமைப்புகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இவர்களில் நான்கில் ஒரு பங்கு அமைப்புகளாக இருந்தன. அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யும் உரிமை, குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 

இதில், பல்வேறு நாட்டு தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், வெளியுறவுக் கொள்கை ஆய்வு நிறுவனங்களின் இயக்குநர்கள், முந்தைய நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் நார்வே நோபல் குழு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்குவர்.


நவி பிள்ளையின் நீண்டகாலப் பொதுவாழ்வில், அனைவருக்கும் சமமான சட்ட உரிமைகள் கிடைக்க வேண்டும் என்ற உறுதியும், அறநெறி சார்ந்த நிலைப்பாடும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளதாக நோபல் பரிசுக் குழு தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான விருதுத் தொகை 1.2 கோடி ஸ்வீடிஷ் குரோனா (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 கோடி) நவி பிள்ளைக்கு வழங்கப்பட உள்ளது.


இது தொடர்பாக நவீ பிள்ளை தனது சமூக வலைதளப் பதிவில், "அனைவருக்கும் நன்றி. நீங்கள் அதிகமாக கைதட்டல்களைக் கொடுத்தால், இந்த விருதை ட்ரம்புடன் பகிர்ந்துகொள்ள தயாராக உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி
AI spending surge for US agencies as subsidised deals give way to market pricing
அடுத்த செய்தி
Meesho, Nazara வருவாய் உயரும் என கணிப்பு

தொடர்புடைய செய்திகள்