Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சிறைக் கைதிகளிடம் வரவேற்பு பெறும் ‘செஸ்’

சிறைக் கைதிகளிடம் வரவேற்பு பெறும் ‘செஸ்’

சிறைகளில் கைதிகளிடையே செஸ் விளையாட்டு பிரபலமடைந்து வருகிறது.

பகிரவும் WhatsApp Facebook

கென்யா சிறைகளில் கைதிகளிடையே செஸ் விளையாட்டு பிரபலமடைந்து வருகிறது. பொழுதுபோக்குடன், பொறுமை, கோபத்தைக் கட்டுப்படுத்துதல், சிந்தித்து முடிவெடுத்தல் ஆகியவற்றைப் பயிற்றுவிக்கும் முயற்சியாகவும் இது மறுவாழ்வுத் திட்டங்களில் இடம்பெற்றுள்ளது. சிறைவாசத்துக்குப் பிறகு சமூகத்தில் மீண்டும் இணைவதற்கு இந்தப் பயிற்சி உதவும் என்று சிறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

கென்யா நாட்டின் மரஞ்சாவ் சிறையில் உள்ள பிரையன் கட்டோன்யே, தாக்குதல் வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர். சுமார் 18 மாதங்களைச் சிறையில் கழித்துள்ள அவர், 2027 நவம்பரில் விடுதலையாக உள்ளார். அவசரப்பட்டுச் செயல்படும் பழக்கத்தைக் குறைக்க செஸ் விளையாட்டு உதவியதாக அவர் கூறினார்.


 எந்தச் செயலையும் செய்வதற்கு முன்பு அதன் விளைவுகளை யோசிக்கவும், அமைதியாக முடிவெடுக்கவும் இந்த விளையாட்டு கற்றுத் தந்துள்ளதாக அவர் தெரிவித்தார். சிறையிலிருந்து வெளியேறிய பிறகும் செஸ் விளையாடுவதைத் தொடர விரும்புவதாகக் கூறிய அவர், அது மன அமைதியைத் தருவதாகவும் குறிப்பிட்டார்.
குடும்பத் தகராறு, தாக்குதல் போன்ற குற்றங்களுக்காகச் சிறைக்கு வந்தவர்கள் தங்கள் கோபத்தை நிர்வகிக்கவும், சமூகத்தினருடன் இணக்கமாக வாழவும் சதுரங்கம் உதவும் என மரஞ்சாவ் சிறைக் கண்காணிப்பாளர் ஹம்ப்ரி யங் தெரிவித்தார்.

 இதற்காகவே மறுவாழ்வுப் பயிற்சிகளில் விளையாட்டைச் சேர்த்ததாக அவர் கூறினார்.
செஸ் பலகைகளையும் காய்களையும் வழங்கும் ‘தி கிஃப்ட் ஆஃப் செஸ்’ தொண்டு அமைப்பும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பொறுமையைக் கற்றுக்கொள்ளவும், சிறந்த முடிவுகளை எடுக்கவும், கோபத்தைக் குறைக்கவும் விளையாட்டு உதவுவதாக அமைப்பின் நிர்வாகி பிலிஸ் நிகிகி தெரிவித்தார்.


கைதிகள் விடுதலையான பிறகு மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்கவும் இந்தப் பயிற்சி உதவக்கூடும் என்பது அவரது நம்பிக்கை. சிறைக்குள் அவர்களின் நேரத்தைப் பயனுள்ளதாகக் கழிக்கவும், வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்புக்குத் தயாராகவும் இது உதவுவதாக அவர் கூறினார்.
கென்யாவின் 134 சிறைகளிலும் தற்போது செஸ் விளையாடப்படுவதாக நிகிகி தெரிவித்தார். சில சிறைகளில் 2022 முதலே இத்திட்டங்கள் செயல்படுகின்றன. அரசு, சர்வதேச செஸ் கூட்டமைப்பு மற்றும் தொண்டு அமைப்புகள் ஆதரவு அளிக்கின்றன.


சிறைகளுக்கு இடையே போட்டிகளும் நடத்தப்படுகின்றன. சில காவலர்கள் பயிற்சியாளர்களாகப் பயிற்சி பெற்று, கைதிகளுடன் விளையாடுகின்றனர். இது கைதிகளும் காவலர்களும் இயல்பாகப் பழக வாய்ப்பளிப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஓய்வு நேரத்தில் சில கைதிகள் கால்பந்து விளையாடுவதற்குப் பதிலாக செஸ் விளையாட்டை தேர்வு செய்கின்றனர். போட்டியில் பங்கேற்பதும், சக கைதிகளுடன் பழகுவதும் அவர்களை ஈர்க்கின்றன.

முந்தைய செய்தி
குரூப் 4 தேர்வு அறிவிப்பை திருத்தி வெளியிட வேண்டும்: டிடிவி தினகரன்
அடுத்த செய்தி
மக்களே கவனம் - வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்பு!

தொடர்புடைய செய்திகள்