Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மேற்கத்திய நாடுகளுக்கு எரிபொருள் ஏற்றுமதி அதிகரிப்பு

மேற்கத்திய நாடுகளுக்கு எரிபொருள் ஏற்றுமதி அதிகரிப்பு

ஏற்றுமதியின் மதிப்பு 100 கோடி யூரோ என எரிசக்தி மற்றும் தூய காற்று ஆராய்ச்சி மையமான சிஆர்இஏ தெரிவித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கான இந்திய பெட்ரோலியப் பொருள் ஏற்றுமதி செப்டம்பரில் 43 சதவீதம் அதிகரித்துள்ளது.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெயை வாங்கி தனது ஆலைகளில் சுத்திகரித்து பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வருகின்றது. ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் உயர்ந்துள்ள இந்த ஏற்றுமதியின் மதிப்பு 100 கோடி யூரோ என எரிசக்தி மற்றும் தூய காற்று ஆராய்ச்சி மையமான சிஆர்இஏ தெரிவித்துள்ளது.


இதில் ஐரோப்பிய ஒன்றியம் 66.7 கோடி யூரோ, ஆஸ்திரேலியா 16.8 கோடி யூரோ, அமெரிக்கா 15.4 கோடி யூரோ, நியூசிலாந்து 1.9 கோடி யூரோ மதிப்பிலான பொருள்களைப் பெற்றன. மொத்தத்தில் 29.5 கோடி யூரோ மதிப்பிலான பெட்ரோலிய பொருள்கள் ரஷ்ய கச்சா எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


ஐரோப்பிய ஒன்றியத் துறைமுகங்களில் இறக்கப்பட்ட ஏழு பெட்ரோலிய பொருள்களில் ஆறு, குஜராத்திலுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜாம்நகர் ஆலையிலிருந்து அனுப்பப்பட்டவை. அமெரிக்காவுக்கும் இந்த ஆலை 12.2 கோடி யூரோ மதிப்பிலான பொருள்களை அனுப்பியது.
இதனிடையே, இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி செப்டம்பரில் 13 சதவீதம் குறைந்து, ஏப்ரலுக்குப் பிறகான குறைந்த அளவை எட்டியது.

 ஜாம்நகர் ஆலையின் இறக்குமதி 27 சதவீதமும், பாரதீப் ஆலையின் இறக்குமதி 21 சதவீதமும், வாடினார் ஆலையின் இறக்குமதி 8 சதவீதமும் சரிந்தன. இதனால், ஜாம்நகரை முந்தி வாடினார் இந்தியாவின் மிகப்பெரிய ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி ஆலையானது.
செப்டம்பரில் ரஷ்ய எரிபொருள்களுக்காக இந்தியா 410 கோடி யூரோ செலவிட்டது. இதில் கச்சா எண்ணெயின் பங்கு 88 சதவீதம். சீனாவுக்கு அடுத்த பெரிய வாடிக்கையாளராக இந்தியா நீடித்தது.


விநியோகக் கட்டுப்பாடுகளும், சீனாவின் போட்டியும் இறக்குமதிச் சரிவுக்குக் காரணங்களாக இருப்பதாக எரிசக்தி வர்த்தகத் தரவுகளை ஆய்வு செய்யும் கெப்லர் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அக்டோபரில் இந்தியாவின் இறக்குமதி நாளொன்றுக்கு 18 முதல் 19 லட்சம் பீப்பாய்களாக இருக்கும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அமெரிக்க அழுத்தம் மட்டுமே ரஷ்யாவிலிருந்து மேற்கொள்ளும் இறக்குமதியின் சரிவுக்குக் காரணமல்ல என்றும் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி
சென்னையில் கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் அரக்கோணம் தேசியப் பேரிடர் மீட்புப்படை
அடுத்த செய்தி
Japan to launch spacecraft on a mission to get samples from a Martian moon

தொடர்புடைய செய்திகள்