Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பழைய கம்ப்யூட்டர் விலை தற்போது 8 லட்சம் டாலராம்? - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

பழைய கம்ப்யூட்டர் விலை தற்போது 8 லட்சம் டாலராம்? - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

ஹாட்ஃபீல்ட் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை. தனது பழைய கணினியையே வைத்துக்கொண்டார். அந்த முடிவின் பின்னணியில் கூடுதலாகச் செலுத்த வேண்டிய 400 டாலர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும் WhatsApp Facebook

ஒரு பழைய கணினியை மாற்றிக்கொள்ள வந்த வாய்ப்பை ஃபிரெட் ஹாட்ஃபீல்ட் ஏற்கவில்லை. அன்று அவர் தக்கவைத்துக்கொண்ட அந்த கணினி தற்போது 8 லட்சம் டாலர் வரை ஏலம் போகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அது சாதாரண கணினி அல்ல. ஆப்பிள் நிறுவனம் முதன்முதலில் அறிமுகப்படுத்திய ‘ஆப்பிள்-1’. அதை வடிவமைத்த ஸ்டீவ் வோஸ்னியாக்கின் கையொப்பமும் அதில் இருக்கிறது.
1976-ம் ஆண்டு உருவான இந்தக் கணினியை, கணினி ஆர்வலரும் கம்ப்யூட்டர் டேட்டா சிஸ்டம்ஸ் நிறுவன ஊழியருமான ஹாட்ஃபீல்ட் வாங்கினார். ஆனால், அதற்கான மென்பொருட்கள் குறைவாக இருந்தன. இதுகுறித்து ஆப்பிள் நிறுவனத்திடம் அவர் புகார் தெரிவித்தார்.
அவருக்குப் பதில் வந்தது. கடிதத்தில் கையொப்பமிட்டிருந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். 1978-ம் ஆண்டு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், பழைய ஆப்பிள்-1 கணினியை அனுப்பி, கூடுதலாக 400 டாலர் செலுத்தினால், புதிய ஆப்பிள்-2 கணினிக்கான மின்சுற்றுப் பலகையை வழங்குவதாக ஜாப்ஸ் தெரிவித்திருந்தார்.

ஹாட்ஃபீல்ட் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை. தனது பழைய கணினியையே வைத்துக்கொண்டார். அந்த முடிவின் பின்னணியில் கூடுதலாகச் செலுத்த வேண்டிய 400 டாலர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது, அவரது பெயரால் ‘ஹாட்ஃபீல்ட் ஆப்பிள்-1’ என்று அழைக்கப்படும் கணினி, நியூயார்க்கில் போன்ஹாம்ஸ் நடத்தும் இணையவழி ஏலத்தில் இடம்பெற்றுள்ளது. அக்டோபர் 4-ம் தேதி தொடங்கிய ஏலம், 14-ம் தேதி நிறைவடைகிறது. இந்தக் கணினிக்கு 5 லட்சம் முதல் 8 லட்சம் அமெரிக்க டாலர் வரை கிடைக்கலாம் என்பது ஏல நிறுவனத்தின் மதிப்பீடு.

இதன் மதிப்புக்கு வயது மட்டுமே காரணமல்ல. இன்றும் இது செயல்படுகிறது. வோஸ்னியாக்கின் கையொப்பத்துடன், ஜாப்ஸ் அனுப்பிய அசல் கடிதமும் இருக்கிறது. முதல் உரிமையாளரிடமிருந்து தொடங்கும் இதன் வரலாறும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் சுமார் 200 ஆப்பிள்-1 கணினிகளே தயாரிக்கப்பட்டன. அவற்றில் தற்போது இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டவை 74 மட்டுமே. செயல்படும் கணினிகள் அதிலும் குறைவு. திரை, விசைப்பலகை, கேசட் பதிவு சாதனம், மின்வழங்கி, இணைப்புக் கம்பிகள், அசல் கையேடுகள் ஆகியவையும் கணினியுடன் ஏலத்தில் இடம்பெற்றுள்ளன. ஆப்பிள்-1 பதிவேட்டில் இது 48-வது எண்ணில் உள்ளது. பெரும்பாலான அசல் பாகங்களையும் இந்தக் கணினி தக்கவைத்துள்ளது.

ஒருகாலத்தில் மென்பொருள் பற்றாக்குறையால் உரிமையாளரைப் புகார் எழுத வைத்த கணினி, இன்று தனிநபர் கணினி வரலாற்றின் அரிய சான்றாக நிற்கிறது. அன்று ஹாட்ஃபீல்ட் ஏற்காத மாற்றுச் சலுகைக்கான கடிதமே, இன்று அந்தக் கணினியின் சிறப்பைச் சொல்லும் ஆவணமாகியுள்ளது. கணினியும் கடிதமும் சேர்ந்தே ஆப்பிளின் ஆரம்பகாலக் கதையைச் சொல்கின்றன. இறுதி விலை, ஏலம் முடிந்த பிறகே தெரியவரும்.


முந்தைய செய்தி
Trichy | Golu doll sales pick up in Karur
அடுத்த செய்தி
பருவநிலை மாற்றத்தால் மறையும் நிலையில் ஸ்லோவேனிய பனிப்பாறை

தொடர்புடைய செய்திகள்