Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பிரிட்டன் கடற்படை வீரர் கைது - வெளிநாட்டுக்கு ரகசிய தகவல்களை வழங்கத் திட்டம்?

பிரிட்டன் கடற்படை வீரர் கைது - வெளிநாட்டுக்கு ரகசிய தகவல்களை வழங்கத் திட்டம்?

லண்டனுக்கு வடக்கே உள்ள பெட்ஃபோர்ட்ஷயரில் வசிக்கும் யங், அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

பகிரவும் WhatsApp Facebook

வெளிநாட்டு சக்திக்கு ரகசியத் தகவல்களை வழங்கத் தயாரானதாக பிரிட்டன் கடற்படை வீரர் டெடி யங் (24) மீது இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லண்டன் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

லண்டனுக்கு வடக்கே உள்ள பெட்ஃபோர்ட்ஷயரில் வசிக்கும் யங், அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். இவர் தற்போது பிரிட்டன் கடற்படையில் பணியாற்றி வருகிறார்.
2024 நவம்பர் 6 முதல் 2025 மே 21 வரையிலான காலத்தில், பாதுகாக்கப்பட்ட தகவல்களை வெளிநாட்டு சக்திக்கு வழங்குவதற்கான தயாரிப்புகளில் யங் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில், வெளிநாட்டு சக்தியின் நலனுக்காக அத்தகவல்களைப் பெற்றது, நகலெடுத்தது, பதிவு செய்தது அல்லது வைத்திருந்தது தொடர்பாகவும் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு குற்றச்சாட்டுகளும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கும் ஃபேர்ஃபோர்டு விமானப்படைத் தளத்தில் அண்மையில் நடந்த சம்பவத்துக்கும் தொடர்பில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர். ஈரான் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் இந்தத் தளத்திலிருந்துதான் புறப்பட்டன. செப்டம்பர் 27-ம் தேதி, தளத்துக்கு அருகே சந்தேகத்துக்குரிய மூன்று வேன்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. அந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யங் மீதான குற்றச்சாட்டுகள், ஃபேர்ஃபோர்டு சம்பவத்திலிருந்து தனித்தவை என்று போலீஸார் தெளிவுபடுத்தியுள்ளனர். இரு சம்பவங்களையும் தொடர்புபடுத்த வேண்டாம் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். 

முந்தைய செய்தி
வைர நகைகளை விற்பனை செய்யும் ஸினாராவுக்கு ரூ.3.61 கோடி முதலீடு
அடுத்த செய்தி
சிறைக்குப் பதிலாக வீட்டுக் காவல்: வெனிசுலா முன்னாள் அதிபர் மனைவி கோரிக்கை

தொடர்புடைய செய்திகள்